உலகின் அதிவேக டாப்-10 சூப்பர் பைக்குகள்!


அதிவேக சூப்பர் பைக்குகளை தயாரிப்பதில் ஐரோப்பிய மற்றும் ஜப்பானிய நிறுவனங்கள் முன்னிலை வகிக்கின்றன. சுஸுகி, கவாஸாகி யமஹா, ஹோண்டா என ஜப்பானிய நிறுவனங்கள் ஒரு பக்கமும், பிஎம்டபிள்யூ மோட்டராடு, எம்வி அகஸ்ட்டா மற்றும் டுகாட்டி என ஐரோப்பிய நிறுவனங்கள் மறுபக்கமும் சூப்பர் பைக் மார்க்கெட்டில் மல்லு கட்டி வருகின்றன.
கண் இமைக்கும் நேரத்தில் கடந்து போகும் ஆற்றல் வாய்ந்த அதிவேக பைக்குகள் குறித்த அறிந்து கொள்ள அனைவருக்கும் ஆவல் இருப்பது இயற்கையே. இந்த செய்தித் தொகுப்பில் உலகின் அதிவேக சூப்பர் பைக்குகள் குறித்த தகவல்களை காணலாம்.
சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-ஆர் 1000

சுஸுகியின் பிரபலமான இந்த சூப்பர் பைக்கில் 160 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 4 சிலிண்டர்கள் கொண்ட 999சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 285 கிமீ வேகத்தில் செல்லும் திறன் வாய்ந்தது.

ஹோண்டா சிபிஆர் 1000ஆர்ஆர்

இந்த பைக்கை ஃபயர்பிளேடு என்றும் அழைக்கின்றனர். சிபிஆர் 150ஆர் மற்றும் சிபிஆர் 250ஆர் பைக்குகள் மூலம் சிபிஆர் வரிசை பற்றி இந்திய வாடிக்கையாளர்களுக்கு நன்கு அறிமுகம் இருக்கிறது. சிபிஆர் வரிசையில் 998சிசி எஞ்சின் கொண்ட இந்த பைக் மணிக்கு அதிகபட்சம் 291 கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றல் வாய்ந்தது.

யமஹா ஒய்இசட்எப்-ஆர்1

சிறந்த கையாளுமை கொண்ட இந்த பைக்கில் 998 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மணிக்கு அதிகபட்சமாக 297 கிமீ வேகம் வரை செல்லும்.

கவாஸாகி நிஞ்சா இசட்இசட்ஆர் 1400

மிரட்டலான தோற்றம் கொண்ட இந்த பைக்கில் 1352சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் அதிகபட்சம் மணிக்கு 299கிமீ வேகத்தில் செல்லும்.

டுகாட்டி 1199 பனிகேல்

டுகாட்டி பைக்குகளுக்கு சர்வதேச அளவில் அதிக ரசிகர்கள் உண்டு. இந்த பைக்கில் 196 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1199 சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மணிக்கு அதிகபட்சமாக 300 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது.

பிஎம்டபிள்யூ எஸ் 1000ஆர்

டுகாட்டியின் நேரடி போட்டியாளர்தான் இந்த சூப்பர் பைக். ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், எலக்ட்ரிக் எவொலியூசன் கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப கட்டுப்பாட்டு அமைப்புகளை பெற்ற இந்த சூப்பர் பைக்கில் 999சிசி எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 305கிமீ வேகம் வரை செல்லும் ஆற்றல் வாய்ந்தது.

எம்வி அகஸ்ட்டா எஃப்3 தம்புரினி

அழகான சூப்பர் பைக்குகள் என வர்ணிக்கப்படும் எம்வி அகஸ்ட்டா பிராண்டின் எஃப்3 தம்புரினியின் வடிவமைப்பு அனைவரையும் கவரும். இந்த பைக்கில் 128 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கின் அதிகபட்ச வேகம் மணிக்கு 307 கிமீ.

எம்வி அகஸ்ட்டா எஃப்-4 ஆர்-312

உலகின் மிக அதிகவேக பைக்குகளில் சிலவற்றை கடைசி மூன்று ஸ்லைடரில் கொடுத்திருக்கிறோம். இதில், எம்வி அகஸ்ட்டா எஃப்4 ஆர்312 மாடல் மணிக்கு 314 கிமீ வேகத்தில் செல்லும் ஆற்றல் வாய்ந்தது.

சுஸுகி ஹயபுசா

சுஸுகியின் பிரபலமான இந்த பைக்கில் 162 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டாப் ஸ்பீட் மணிக்கு 320 கிமீ.

எம்டிடி டர்பைன் சூப்பர்பைக் ஒய்2கே

இந்த பைக்கில் சாதாரண எஞ்சினுக்கு பதிலாக ரோல்ஸ்ராய்ஸின் ஹெலிகாப்டர் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 300 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும். மணிக்கு 370 கிமீ வேகம் வரை சீறிப்பாயும் திறன் கொண்டது.

மாலேகான் குண்டுவெடிப்பு- ஆர்எஸ்எஸ் உறுப்பினர் கைது


 Rss Member Nia Net 2006 Malegaon Blast  டெல்லி: 2006ம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவரை சனிக்கிழமை தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் கைது செய்தனர். இவர் குண்டு வைத்த கும்பலைச் சேர்ந்தவர்களில் முக்கியமானவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரின் பெயர் மனோகர் சிங், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம், குர்தகேடி கிராமத்தைச் சேர்ந்தவர். ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர். ஆர்எஸ்எஸ் அமைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருபவரான மனோகர் சிங், 2006ம் ஆண்டு செப்டம்பர் 8ம் தேதி மாலேகான் நகரில் உள்ள ஹமீதா மசூதி அருகே நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் முக்கியப் பங்காற்றியுள்ளார். அங்கு சைக்கிள் வெடிகுண்டை வைத்த நான்கு பேரில் இவரும் ஒருவர். இந்தக் குண்டுவெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. குண்டு வைத்த நால்வரில் மனோகர் சிங் போக, மற்ற மூவராக ராஜேந்திர் செளத்ரி, ராம்ஜி கல்சங்க்ரா, தான் சிங் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் கல்சங்க்ரா தலைமறைவாக உள்ளார். தான் சிங், செளத்ரி ஆகியோர் 2 வாரங்களுக்கு முன்புதான் கைது செய்யப்பட்டனர். இந்த இருவருக்கும் சம்ஜாதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புச் சம்பவத்திலும் தொடர்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. மாலேகான் குண்டுவெடிப்பில் முதலில் முஸ்லீ்ம்களைத்தான் விசாரணை அமைப்புகள் சந்தேகப்பட்டு வந்தன. ஆனால் 2010ம் ஆண்டுதான் முதல் முறையாக இதில் இந்து தீவிரவாதம் சம்பந்தப்பட்டிருப்பது அம்பலத்திற்கு வந்தது. முதலில் சுவாமி அசீமானந்த் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் இந்து அமைப்புகளைச் சேர்ந்த பலரும் கைதானார்கள். தற்போது இந்த வழக்கை தேசிய புலனாய்வு ஏஜென்சி விசாரித்து வருகிறது.

பாம்பை வேட்டையாடும் மனிதர்களின் அதிர்ச்சிக் காட்சி


பாம்பை வேட்டையாடும் மனிதர்களின் அதிர்ச்சிக் காட்சி (தைரியமானவர்களுக்கு மட்டும்)பாம்பை வேட்டையாடும் மனிதர்களின் அதிர்ச்சிக் காட்சி 


பாலியல் கொடுமைக்குள்ளான டெல்லி பெண் சிங்கப்பூர் மருத்துவமனையில் மரணம்


 Student Gang Raped On Delhi Bus Dies Singapore Hospital  சிங்கப்பூர்: டெல்லியில் ஓடும் பஸ்சில் ஒரு கும்பலால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடி வந்த 23 வயது மருத்துவ மாணவி சிங்கப்பூர் மெளன்ட் எலிசபெத் மருத்துவமனையில் இன்று அதிகாலையில் உயிரிழந்தார். மரணத்துடன் கடுமையாக போராடி வந்த அந்த மாணவி, தான் வாழ வேண்டும், வாழ விரும்புகிறேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவரது வாழ்க்கை இன்று காலையில் முடிவுக்கு வந்து விடட்து. மாணவி மரணத்தைத் தழுவியபோது அவரது பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினர் அருகில் இருந்தனர். இந்தியநேரப்படி அதிகாலை 2.15 மணிக்கு மாணவி உயிரிழந்தார். அவரது உடல் உடனடியாக சிங்கப்பூர் அரசு பொது மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரேதப் பரிசோதனை முடிவடைந்த பின்னர் இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் உடல் ஒப்படைக்கப்படும். அதன் பின்னர் அவரது உடல் இந்தியா கொண்டு வரப்படும். மாணவியின் மரணம் குறித்து சிங்கப்பூர் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கடைசி வரை அந்தப் பெண் மிகவும் தைரியத்தோடு உயிருக்குப் போராடி வந்தார். ஆனால் அவரது மூளை மற்றும் நுரையீரலில் ஏற்பட்டிருந்த கடும் பாதிப்புகள் அவரது நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில், அமைந்து விட்டது. அவரது உடலும் சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் போய் விட்டது. எட்டு சிறப்பு மருத்துவர்கள் அந்த மாணவியைக் காப்பாற்ற கடுமையாக போராடினர். அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் கடந்த 2 நாட்களாக அவரது உடல் நிலை மோசமாகி வந்தது. பல்வேறு உறுப்புகள் செயலிழக்கத் தொடங்கின என்று கூறப்பட்டிருந்தது. கடந்த 13 நாட்களாக மாணவி உயிருக்குப் போராடி வந்தார். அவர் நலம் பெற்றுத் திரும்ப வேண்டும் என்று கோரி நாடு முழுவதும் பல்வேறு வகையான போராட்டங்களும், பிரார்த்தனைகளும் நடந்தவண்ணம் இருந்தன. டெல்லியில் இந்தியா கேட் பகுதியில் தொடர் போராட்டங்களும் நடந்து வந்தன. அப்பெண்ணுக்கு மூன்று பெரிய அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஒருமுறை மாரடைப்பும் வந்தது. இதையடுத்தே அவரை சிங்கப்பூர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. டிசம்பர் 16ம் தேதி இப்பெண் தனது நண்பருடன் பஸ்சில் பயணித்தபோது ஒரு கும்பல் அப்பெண்ணை கொடூரமாக சிதைத்துத் தாக்கியது.அவரது நண்பரும் கடுமையாக தாக்கப்பட்டார். பின்னர் அப்பெண்ணையும்,நண்பரையும் ஒரு பாலத்தில் தூக்கி வீசி விட்டுஅக்கும்பல் தப்பி விட்டது. அக்கும்பலைச் சேர்ந்த அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனர்.

ஆணைவிட பெண் புத்திசாலி மட்டுமல்ல மேம்பட்ட திறமைசாலி! : நிரூபிக்கப்பட்ட உண்மை

அடுக்களையில் அடிமைகளாக இருந்த பெண்கள் கடந்த முப்பதாண்டு காலத்தில் உலகத்தையே அடிமைப்படுத்தும் அளவிற்கு ஆளுமைத்திறன் படைத்தவர்களாக வளர்ந்திருக்கின்றனர். வீடோ அலுவலகமோ அவர்களின் பன்முகத்திறமை பளிச்சிடுகிறது. ஒவ்வொரு செயலிலும் வெளிப்படும் புத்திசாலித்தனம் அவர்களின் திறமையை உலகிற்கு பறைசாற்றுகிறது. ஆனால் பெண்களை மட்டம் தட்ட நினைக்கும் ஆண்கள் பாலியல் ரீதியாக அவர்களை துன்புறுத்துகின்றனர். எங்கு அடித்தால் அவர்களுக்கு வலிக்கும் என்பதை உணர்ந்துள்ள ஆண்கள் அவர்களின் பெண்மையை குறிவைத்து தாக்குகின்றனர். இதுபோன்ற சவால்களையும் சந்தித்து வரும் பெண்கள் படிப்போ, வேலையோ எல்லாவற்றிலும் ஆண்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதை பெண்கள் ஒவ்வொரு முறையும் நிரூபித்துக்கொண்டிருக்கின்றனர். ஆண்களை விட எந்தெந்த விதத்தில் பெண்கள் மேம்பட்டவர்களாக இருக்கின்றனர் என்று பத்து விசயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது படியுங்களேன்.

தாய்மை உணர்வு 
கருவை சுமக்கும் பெண் வலிமையானவளாகவும், உணர்வுகளையும், அன்பையும் ஒவ்வொருவருக்கும் பகிர்ந்தளிப்பவளாகவும் இருக்கிறாள். கடவுளின் சிறந்த படைப்பு பெண் என்றால் மிகையாகாது.

ஆளுமைத்திறன் அதிகம் 
பெண்கள் இன்றைக்கு மருத்துவர்களாக, பொறியியல் வல்லுனர்களாக, ஆசிரியர்களாக, விமானம் ஓட்டுபவர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர். மிகப்பெரிய நிறுவனங்களில் சி.இ.ஒ பதவியை கூட பெண்கள்தான் வகிக்கின்றனர். அவர்களின் ஆளுமைத்திறன் அதிகம். இந்தியாவில் ருக்மணி லட்சுமிபாய், இந்திரா காந்தி, ஜெயலலிதா, சோனியா, மம்தா பானர்ஜி, மாயாவதி உள்ளிட்ட பெண் தலைவர்களின் ஆளுமைத்திறன் உலக அளவில் பிரசித்தி பெற்றது.

பெண்கள் ஆரோக்கியசாலிகள்
இன்றைக்கு ஆண்களை விட பெண்கள்தான் 5 முதல் 10 வயதுவரை அதிகம் உயிர் வாழ்கின்றனர். உலக அளவில் 85 சதவிகித பெண்கள் 100 வயதுவரை வாழ்வதாக புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது. ஆண்கள்தான் அதிக அளவில் மாரடைப்பினால் இறக்கின்றனர். பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுவது குறைவுதான் இதற்கு காரணம் அவர்களின் உடலில் சுரக்கு ஈஸ்ரோஜன் என்ற ஹார்மோன்தான். இது ரத்தத்தில் தேவையற்ற கொழுப்பு சேர்வதை தடுக்கிறதாம்.

பன்முகத்திறமை அதிகம்

இயற்கையாகவே பெண்கள் பன்முகத்திறன் படைத்தவர்கள். பிரச்சினைகளை எளிதில் கையாளுவார்கள் என்று உளவியல் நிபுணர்கள் நிரூபித்துள்ளனர். அன்னையாகவும், மனைவியாகவும் அதே சமயத்தில் அலுவலகத்தில் அதிகாரிகளாகவும் பணிபுரிந்து தங்களில் திறமையை நிரூபித்துள்ளனர்.

பெண் சிறந்த மேலாளர் 
மிகப்பெரிய நிறுவனங்களில் மேலாளர்களாக பதவி வகிக்கும் பெண்கள் அந்த நிறுவனத்தினை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஹிலாரி கிளிண்டன், சாந்தா கோச்சர், இந்திராநூயி, உள்ளிட்ட பெண்கள் தாங்களுக்கு அளிக்கப்பட்ட பதவியை திறமையாக நிர்வாகித்து நிரூபித்துள்ளனர்.

மகிழ்ச்சியான மனநிலை
பெண்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கின்றனர். அதுதான் அவர்களின் வெற்றிக்கு காரணமாக இருக்கிறது. கணவர் குழந்தைகளிடம் மகிழ்ச்சியோடு சமாளிக்கின்றனர். தன்னுடன் பணிபுரிபவர்கள், அலுவலக உயரதிகாரிகள் ஆகியோருடன் இதே மகிழ்ச்சியான மனநிலையுடன் தான் பேசுகின்றனர். ஆண்களின் சந்தோசம் பணம் சார்ந்தது. ஆனால் பெண்களின் சந்தோசம் பொருளாதாரத்தை மட்டுமே சார்ந்தது அல்ல என்கின்றது நீல்சன் நிறுவனம்.

வசீகரிக்கும் அழகு

பெண்கள் இயற்கையிலேயே அழகானவர்கள். அது கடவுள் கொடுத்த வரம். பதின்பருவ பெண் ஒருவித அழகு என்றால் குழந்தை பேற்றுக்குப் பின்னர் பெண்களுக்கு அழகுடன் கம்பீரமும் அதிகரிக்கும். எதிர்காலத் தலைமுறையை உலகிற்கு அறிமுகம் செய்துவிட்டோம் என்ற கர்வத்தில் பெண்களுக்கு அழகு கூடுமாம்.

எதையும் சமாளிப்பார்கள் 
பெண்கள் எத்தகைய பிரச்சினைகளையும் சமாளிக்கும் திறன் படைத்தவர்கள் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவது குறைவுதான் என்று ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளனர்.

தீர்க்கதரிசனம் அதிகம்
பெண்கள் ஆலோசனை சொல்வதில் சிறந்தவர்கள். அவர்கள் எதையும் தீர்க்கதரிசனத்துடன் அணுகுவார்கள். அதனால்தான் பெண்புத்தி பின்புத்தி என்ற பழமொழியே உருவானது. ஆனால் இந்த பழமொழியை சில தவறாக சொல்லி வருகின்றனர். எதையும் லாஜிக் ஆக யோசிப்பதில் பெண்கள் கில்லாடிகளாம்.

பெண்கள் சுகாதாரமானவர்கள் 
ஆண்களை விட பெண்கள் சுகாதாரமானவர்கள் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் ஆண்கள் பணிபுரியும் இடத்தில் பத்து முதல் இருபது சதவிகித பாக்டீரியா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் பெண்கள் பணிபுரியும் சூழல் சுகாதாரமாக இருந்ததாம். தவிர அவர்கள் ஆரோக்கியமான உணவையே உட்கொள்கின்றனர். அதனால்தான் பெண்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஆண்களை விட அதிகமாக உள்ளது என்று கண்டறிந்துள்ளனர்.



டெல்லி மாணவியை சீரழித்தவனை அடித்து, சிறுநீரைக் குடிக்கச் செய்த திகார் கைதிகள்

டெல்லி: டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ படிப்பு மாணவியை சீரழித்தவர்களில் ஒருவரான முகேஷ் சிங்கை திஹார் சிறையில் அடைத்துள்ளனர். அங்கு அவரை சக கைதிகள் அடித்து நொறுக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ படிப்பு படிக்கும் மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் சீரழித்து இரும்புக் கம்பியால் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே அவரை சீரழித்தவர்களில் பேருந்து ஓட்டுநர் ராம் சிங், அவரது சகோதரர் முகேஷ் சிங், வினய் சர்மா மற்றும் பவன் குப்தா ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அதில் முகேஷ் சிங் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணுடன் இருந்த அவருடைய ஆண் நண்பர் நேற்று திஹார் சிறைக்கு வந்து முகேஷ் சிங்கை அடையாளம் காட்டினார். இதற்கிடையே திகார் சிறையில் உள்ள கைதிகள் முகேஷ் சிங்கை அடித்து நொறுக்கி அவரின் சிறுநீர் மற்றும் மலத்தை அவரை சாப்பிட வைத்துள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது. அந்த பெண் கற்பழிக்கப்பட்டபோது முகேஷ் தான் பேருந்தை ஓட்டியுள்ளார். பின்னர் தடையங்களை அழிக்க அவர்கள் அந்த பெண் மற்றும் அவருடன் இருந்த ஆண் நண்பரின் ஆடைகளை அவிழ்த்துவிட்டு பேருந்தில் இருந்து கீழே வீசிவிட்டனர்.

இவங்க லொல்லு தாங்க முடியல!...


இவங்க லொல்லு தாங்க முடியல!...


பெண்களுக்கான நவீன காண்டம்: கர்ப்பம், எய்ட்ஸ் என அனைத்தையும் தடுக்குமாம்













வாஷிங்டன்: காண்டம் அணிவது கருத்தடைக்காக மட்டுமல்ல அது பாலியல் நோய் எதுவும் தாக்காமல் பாதுகாக்கக் கூடியது. தற்போது பெண்களுக்காக கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகை காண்டம் ஒன்று நமது உடலுக்குள் நுழையும் எச்ஐவி போன்ற நோய்க் கிருமிகளைத் தடுத்து நிறுத்துமாம் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் பெண்களுக்கான இந்த நவீன கருத்தடை சாதனத்தை உருவாக்கியுள்ளனர். இது மாத்திரை போல சாப்பிடுவது அல்ல, மாறாக நமது உடலுக்குள் செலுத்தும்படியானது. அதாவது நமது உடலுக்குள் செலுத்தி அது நமது ரத்தத்தோடு கலந்து செயல்படும் வகையில் இதை உருவாக்கியுள்னர். மிகவும் சிறிய நுன்னிழைகளால் ஆன இந்த கருத்தடை சாதனம் உடலுக்குள் செலுத்தப்பட்ட பின்னர் உள்ளே போய் கண்ணுக்குத் தெரியாத வலையமைப்பை உருவாக்கிக் கொள்கிறது. இந்த வலையமைப்பானது நமது உடலுக்குள் நுழையும் எச்ஐவி போன்ற நோய்க் கிருமிகளைத் தடுத்து நிறுத்துகிறது. அதேபோல விந்தனுவையும் இது தடுத்த நிறுத்தி கர்ப்பம் உருவாவதை தடுக்கிறது. இந்த சாதனத்தை தேவைப்படும் வரை இதை நாம் உடலுக்குள் வைத்திருக்கலாம். தேவையில்லை என்று கருதினால் உடனேஅதற்குரிய மருந்தை செலுத்தி அழித்து விடலாம். இதற்கு சில நிமிடங்களே போதுமானதாம். இந்த உடலுக்குள் செலுத்தும் கருத்தடை மருந்தானது, எச்ஐவி எதிர்ப்பு மருந்துகளை தானே உர்பத்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதுதான் விஷேசம்.

படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை டிஸ்மிஸ் செய்யலாம்: ஹைகோர்ட் உத்தரவு

சென்னை: பேருந்து படிக்கட்டுகளில் பயணம் செய்யும் மாணவர்களை பள்ளிகளில் இருந்து டிஸ்மிஸ் செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, பெருங்குடி அருகே கந்தன் சாவடியில் கடந்த, 10ம் தேதி நடைபெற்ற விபத்தில் படிக்கட்டில் பயணம் செய்த 4 மாணவர்கள் உயிரிழந்தனர். இது குறித்து, பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதையடுத்து, சம்பவம் குறித்து, தானாக முன்வந்து, தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி பாஷா அடங்கிய, "முதல் பெஞ்ச்' வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இத்தகைய சோக சம்பவங்கள், எதிர்காலத்தில் நிகழாமல் தவிர்க்க, என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது என, அரசு, போக்குவரத்துத் துறை, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரிகளிடம் விளக்கம் பெற வேண்டும் என, அட்வகேட் ஜெனரலுக்கு, "முதல் பெஞ்ச்' உத்தரவிட்டிருந்தது. இவ்வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் அடங்கிய, "முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனர் கருணாசாகர், போக்குவரத்து துறையின், முதன்மை செயலரின் அறிக்கை, தாக்கல் செய்யப்பட்டது.அட்வகேட் ஜெனரலின் வாதத்துக்குப் பின், "முதல் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு வருமாறு: தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், எடுக்கப் போகிற நடவடிக்கைகள்,போக்குவரத்து முறையை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், படிக்கட்டுகளில் பயணிப்பவர்களுக்கு நேரும் விபத்துகளைக் குறைக்கும் வகையிலும் இருக்கும்.இந்த நடைமுறைகள் பற்றி, பத்திரிகைகளிலும், "டிவி' சேனல்களிலும், விரிவாக விளம்பரப்படுத்த வேண்டும் என, நாங்கள் வலியுறுத்துகிறோம். பேருந்து படிக்கட்டுகளில், பயணிக்கும் பள்ளி மாணவர்கள், சிறுவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, பள்ளி, கல்லூரிகள் செல்லும் குழந்தைகளின்பெற்றோருக்குதெரியப்படுத்த வேண்டும். தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை, புதன்கிழமை முதலே அமல்படுத்த, கூடுதல் போக்குவரத்து போலீஸ் கமிஷனர், நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த மாணவராவது, படிக்கட்டில் பயணித்தது தெரிந்தால், அந்த மாணவனின் பெற்றோருக்கு மட்டுமல்லாமல், அவர் படிக்கும் பள்ளி அல்லது கல்லூரிக்கும் தெரியப்படுத்த வேண்டும். அந்த மாணவன், இரண்டாவது, மூன்றாவது முறையும், அவ்வாறு படிக்கட்டில் பயணித்தால், அவரது பெற்றோருக்கு தெரியப்படுத்தி விட்டு, பள்ளியில் இருந்து நீக்க, நடவடிக்கை எடுக்கலாம். இந்த வழக்கு, ஜன., 2ம் தேதிக்கு, தள்ளிவைக்கப்படுகிறது. எடுக்கப்பட்ட நடவடிக்கையின் முன்னேற்றம் பற்றி, அன்றைய தினம் போக்குவரத்து கூடுதல் போலீஸ் கமிஷனர், அரசின் முதன்மை செயலர், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


இடைவிடாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்த குண்டுப்பெண் மரணம்

அமெரிக்காவில் எப்போதும் சாப்பிட்டுகொண்டே இருந்த காரணத்தினால், பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். இது குறித்து ஆவணப்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது.
புளோரிடாவின் மியாமியை சேர்ந்தவர் டாமினிக் லனாய்ஸ்(வயது 40). இவர் கிட்டத்தட்ட கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டை விட்டே வெளியே வரவில்லை. ஏன் படுக்கையை விட்டுக் கூட எழுந்திரிக்கவில்லை. அதற்கு காரணம் அவரது எடை 283 கிலோ ஆகும்.
டாமினிக் முதலில் ஸ்லிம்மாகத் தான் இருந்துள்ளார். ஆனால் 16 வயதில் குழந்தையை பெற்றெடுத்தது முதல், டாமினிக்கின் உடல் எடை அதிகரித்து விட்டதாம். இப்படி படுக்கையிலேயே இருந்த டாமினிக்கை அவரது குழந்தைகள் தான் கவனித்துக் கொண்டனர்.
இந்நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து அவரது வயிற்றுப் பகுதியை பெருமளவு குறைக்க மருத்துவர்கள் முடிவு செய்தனர். ஆனால் அதற்குள் அவர் கடந்த மார்ச் மாதம் இறந்துவிட்டார்.
இந்நிலையில் அவரது வாழ்க்கை குறித்த ஆவணப்படம் ஒன்றை தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பியுள்ளது.
இவ்வளவு குண்டான ஒருவர் இருக்கிறார் என்பதே கடந்த 2010ஆம் ஆண்டு தான் ஊடகங்களின் கவனத்திற்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி டாமினிக், தான் நினைத்தபடி அதிகளவு சாப்பிட்டதால் தான் பலியானாதாக தெரிவிக்கப்படுகிறது.




கொல்கத்தாவில் கள்ளக்காதலனுடன் ஓடிய தங்கையின் தலையை துண்டித்த அண்ணன்

213

கொல்கத்தா: கொல்கத்தாவில் கள்ளக்காதலுடன் ஓடிப் போன தங்கையின் தலையைத் துண்டித்து அதனுடன் சரணடைந்த வாலிரை போலீசார் கைது செய்தனர்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் மேத்தாப் ஆலம்(29). டெய்லர். அவரது தங்கை நிலோபர் பீபி(22). கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு நிலோபருக்கும், அக்பர் என்பவருக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் நிலோபருக்கு பிரோஸ் எனற வாலிபருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் அக்பரின் சகோதரர் தன்னை கொடுமைப்படுத்துகிறார் என்று கூறிவிட்டு தனது கள்ளக்காதலனுடன் கடந்த மாதம் 28ம் தேதி வீட்டை விட்டு ஓடிவிட்டார்.
இதையடுத்து இது குறித்து நிலோபரின் தந்தை போலீசில் புகார் கொடுத்தார். இதற்கிடையே மேத்தாப் தனது தங்கை அய்யூப் நகரில் இருப்பதைக் கண்டுபிடித்து கடந்த வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு அங்கு சென்றார். குடும்ப மானத்தை காற்றில் பறக்கவிட்டுவிட்டு கள்ளக் காதலுனுடன் ஓடிய தங்கையைப் பார்த்ததும் அவரால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை. உடனே தான் வைத்திருந்த வாளை எடுத்து தங்கையின் தலையை துண்டித்து கொன்றார்.
பின்னர் அந்த தலையை தூக்கிக் கொண்டு சென்று அருகில் உள்ள காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
இது குறித்து இணை கமிஷனர் பல்லப் கன்டி கோஷ் கூறுகையில்,
பிரோஸையும் கொல்லத் திட்டமிட்டதாக மேத்தாப் தெரிவித்தார். ஆனால் மேத்தாப் அங்கு சென்ற நேரம் பிரோஸ் வீட்டில் இல்லை. நிலோபரை வெட்டும்போது பிரோஸின் உறவினர் சாபூ மேத்தாபை தடுக்க முயன்றார். இதில் சாபூவின் வலது கரம் கிட்டத்தட்ட துண்டாகிவிட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார் என்றார்.

நிர்வாண பெண்ணின் உடலில் உணவை பரிமாறும் ஜப்பான் ஹோட்டல்

நிர்வாண பெண்ணின் உடலில் உணவை பரிமாறும் ஜப்பான் ஹோட்டல்ஜப்பானில் உள்ள ஹோட்டலில் புதுவிதமான முறையில் உணவுகளை பரிமாறுகிறார்கள்.
மியாமியில் உள்ள குங்பூ கிச்சன் மற்றும் சுஷி ஆகிய இரு ஹோட்டல்களில் ஜப்பானிய வகை உணவுகளை வித்தியாசமான முறையில் கொடுக்கிறார்கள்.
அது என்னவென்றால் நிர்வாணமாக படுத்திருக்கும் ஒரு பெண்ணின் உடலில் உணவுகளை வைத்து அதை வாடிக்கையாளர்களுக்கு தருகிறார்கள்.
அதாவது தட்டுக்கு பதில் ஒரு பெண் நிர்வாணமாக படுத்திருப்பார். அவர் மீது உணவுகள் வைக்கப்பட்டிருக்கும், அந்த உணவை பரிமாறுவார்களாம்
இதுகுறித்து அந்த உணவகத்தின் தலைமைச் சமையலர் கூறுகையில், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வாணப் பெண்ணின் உடலில் உணவுகளை வைத்துப் பரிமாறுவதை, சாப்பிடுவதை ஜப்பானியர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். இது ஜப்பானியர்களின் பாரம்பரியம் என்று கூறினார்.
ஒரு பெண்ணின் உடலில் வைக்கப்படும் உணவை 15 பேர் வரை சாப்பிடலாம். இந்த உணவுக்கான கட்டணம் 500  டாலர்களாகும்.

சந்திரனில் காய்கறித் தோட்டம் உருவாக்கப் போகிறதாம் சீனா

சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? என்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக ஆய்வுகள் நடத்திவருகின்றன
இதற்கிடையில் விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கு அங்கேயே உணவுக்கு புத்தம் புதிய காய்கறிகள் கிடைக்கும் வகையில் தோட்டம் அமைக்க முடியுமா? என்ற முயற்சியில் சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் தீவிரமாக ஈடுபட்டது.
இதற்காக பெரிய பரிசோதனை கூண்டு அமைத்து ஆய்வு நடத்தினார்கள். இந்த பரிசோதனையில் வெற்றி பெற்றிருப்பதாக ஆராய்ச்சி நிலையத்தின் துணை இயக்குனர் டெங் யிபிங் தெரிவித்துள்ளார்.
“டைனமிங் பேலன்ஸ்டு மெக்கானிஷம்” என்பதை பயன்படுத்தி ஆகாய வெளியில் ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைடு மற்றும் தண்ணீரை உருவாக்க முடியும் என்று கூறியுள்ளார்.
இதன் மூலம் எதிர்காலத்தில் விண்வெளி வீரர்களுக்கு உணவு மற்றும் ஆக்சிஜன் ஆகியவற்றை கொடுக்க முடியும் என்ற நிலை உருவாகப் போகிறது.




22 ஆண்டுகளாக பாதாள சாக்கடையில் வாழும் தம்பதியர்

தென்அமெரிக்க நாடான கொலம்பியாவின் மெடலின் நகரை சேர்ந்த மிகியல் ரெஸ்டிரபோ மரியா கார்சியா என்ற் தம்பதிகள் சொந்த வீடு இல்லாமல் கடந்த 22 ஆண்டுகளாக பாதாள சாக்கடையில் வசிக்கின்றனர்.
இவர்கள் வசித்து வந்த பாதாள சாக்கடை மெடலின் புறநகர் பகுதியில் ஆள்நடமாட்டமின்றி காணப்படும் இடமாகும்.
தனது வீட்டு வாசலில் கிறிஸ்துமஸ் மரம் கட்டிக் கொண்டிருந்த மிகியல் தனது அண்டர்கிரவுண்டு பங்களா பற்றி கூறுகையில், ஆரம்பத்தில் கூலி வேலைக்கு சென்று வந்த நான் துரதிர்ஷ்டவசமாக போதை பழக்கத்துக்கு அடிமையானதால் வேலையை இழந்தேன்.
சாப்பாடு இன்றியும், தங்க இடமின்றியும் தவித்த எங்களுக்கு மெடலின் நகரின் ஒரு ஓரத்தில் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தது இந்த பாதாள சாக்கடை. இந்த இடத்துக்கு பாதாள சாக்கடை தேவையில்லை என்பதால் அதிகாரிகள் இதை அடைத்துவிட்டு போனது எங்களுக்கு வசதியாகிவிட்டது.
இந்த ஒண்டுக்குடித்தன வீட்டில் கூடவே அவர்களோடு செல்ல நாய் பிளாக்கியும் இருக்கிறது. ஆக்கிரமிப்பு என்று கூறி எந்நேரத்திலும் அதிகாரிகள் எங்களை விரட்டியடிக்கலாம். 22 ஆண்டுகளாக அதுபோன்ற சம்பவம் நடக்காதது எங்கள் அதிர்ஷ்டம் என்று கூறியுள்ளார்.