இந்தியாவில் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைக் கடந்தது!

இந்தியாவில் கரோனா பாதிப்பு ஒரு லட்சத்தைக் கடந்து 1,01,139 ஆக உயர்ந்துள்ளது. 


india coronavirus peoples ministry of health இந்தியாவில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே 31- ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

இன்று (19/05/2020) காலை 08.00 மணி நிலவரப்படி இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 96,169- லிருந்து 1,01,139 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3,029- லிருந்து 3,163 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 36,824- லிருந்து 39,174 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்ட 58,802 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

india coronavirus peoples ministry of health

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 35,058 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 8,437 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 1,249 பேர் உயிரிழந்துள்ளனர். 

அதேபோல் குஜராத்தில் 11,745, தமிழகத்தில் 11,760, டெல்லியில் 10,054, ராஜஸ்தானில் 5,507, மத்திய பிரதேசத்தில் 5,236, உத்தரப்பிரதேசத்தில் 4,605, ஆந்திராவில் 2,474, தெலங்கானாவில் 1,597, கர்நாடகாவில் 1,246, கேரளாவில் 630, புதுச்சேரியில் 18 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் நேற்று (18/05/2020) ஒரே நாளில் மட்டும் 4,970 பேருக்கு கரோனா உறுதியான நிலையில், 134 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


Olá! Se você ainda não assinou, assine nosso RSS feed e receba nossas atualizações por email, ou siga nos no Twitter.
Nome: Email: