எபோலா எச்சரிக்கை: ஆப்பிரிக்காவில் இருந்து வந்த குடும்பத்திற்கு மதுரை விமான நிலையத்தில் மருத்துவபரிசோதனை

மதுரை, 

ஆப்பிரிக்கா நாட்டில் தற்போது எபோலா என்ற வகை கொடிய நோய் பரவி வருகிறது. இந்நோயால் 1200க்கும் மேற்பட்டவர்கள் உயிர் இழந்துள்ளனர். இந்த நிலையில் அந்த நோயை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.அந்ததந்த நாடுகளில் இதற்கான தடுப்பு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆப்பிரிக்க நாடுகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். ’எபோலா’ நோய்க்கு பயந்து நாடு திரும்பிய வண்ணம் உள்ளனர். அவர்கள் மூலம் நம் நாட்டிலும் நோய் பரவி விடக்கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மத்திய&மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது.

இதை தொஅடரந்து இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களிலும் சிறப்பு மருத்துவ குழுக்கள் அமைக்கபட்டு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு முழு சோதனை நடத்தப்படுகிறது. இது போல் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் மருத்துவ குழுவினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

நேற்று முன்தினம் மாலை துபாயில் இருந்து மதுரை வந்த ஜெட் விமானத்தில் ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கானா வில் இருந்து 3 பேர் வந்தனர்

அவர்கள் டவ்லோ டிவைன் அமி (வயது45) என்பவர் தனது மகள்கள் டிபென்ட்ரி ஐராம் போபி (6), அன்ட்ரி எமிபா அப்லா (3) ஆகியோருடன் மதுரை வந்தது தெரியவந்தது.இவர் தான் படித்த கொடைக்கானல் பள்ளி நிக்ழ்ச்சியில் கலந்து கொள்ள வந்து உள்ளார். மதுரை விமான நிலைஅயத்தில் இவர்கள் 3 பேரையும் மருத்துவ குழுவினர் ரிசோதனை செய்து பார்த்தனர். அவர்களுக்கு எபோலா வைரஸ் தாக்குதல் இல்லை என தெரியவந்ததும் கொடைக்கானலுக்கு அனுப்பி வைத்தனர்.